தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
சங்கரத்தாழ்வார் நகரைச் சேர்ந்த ராஜ்குமார் ஜார்க்கண்ட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி டென்னிஸ் ராணி வெளியே சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து 20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.