எலான் மஸ்க்கின் தமிழ் பட மீம்ஸ் பின்னணி என்ன?
Sep 11, 2025, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எலான் மஸ்க்கின் தமிழ் பட மீம்ஸ் பின்னணி என்ன?

Web Desk by Web Desk
Jun 13, 2024, 07:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மிகப் பெரிய தொழிலதிபரான, டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தமிழ் சினிமா ஒன்றின் புகைப்படம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.

ஐபோன் உள்ளிட்ட தனது சாதனங்களில் CHAT GPT தொழில்நுட்பத்தைக் கொண்டுவரும் முயற்சியில், ஆப்பிள் நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக OPEN AI நிறுவனத்துடன் ஒரு உடன்படிக்கையிலும் கையெழுத்திட்டது ஆப்பிள்.

இதன் மூலம் ஆப்பிள் செயற்கை நுண்ணறிவு அறிமுகமாகிறது என்று ஆப்பிள் தலைமை செயல் தலைவர் டிம் குக் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

ஆப்பிளின் இந்த செயற்கை நுண்ணறிவு அறிவிப்புக்குத் தான் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கொதித்தெழுந்திருக்கிறார்.

OpenAI-Apple இணைந்து செயல்பட இருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்திருக்கும் எலான் மஸ்க் , தனது எக்ஸ் பதிவில், இந்த ஆப்பிள் ஓபன் ஏஐ குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறார். .

தனது அலுவலகங்களில் எந்த ஆப்பிள் சாதனத்துக்கும் அனுமதி கிடையாது என ஆப்பிளுக்கு என்றும், தனது அலுவலகத்துக்கு வரும் பார்வையாளர்களின் ஆப்பிள் சாதனங்களும் வாசலிலேயே பரிசோதனை செய்யப்படும் என்றும் எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார்.

OpenAI ஒரு SPYWARE என்று விமர்சிக்கும்,எலான் மஸ்க், அதே சமயத்தில் ஆப்பிள் ஓபன்ஏஐ உள்ளடக்கிய ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தும் நுகர்வோருக்குத் தனது தரவுகள் திருடப்படும் என்ற அச்சத்தை உருவாக்கும் வகையில் மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். தப்பாட்டம் என்ற தமிழ்படத்தின் ஸ்டில் புகைப்படம் ஒன்றை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

2015ம் ஆண்டு OPEN AI தொடங்கப்பட்டபோது அதை விட்டு விலகி வந்தவுடன், OPEN AI மீது எலான் மஸ்க் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் OPEN AI மேற்கொள்ளும் செயற்கை நுண்ணறிவு என்ற தொழில் நுட்ப ஆராய்ச்சிகளுக்குத் தடையும் கோரி இருந்தார். எனினும், அந்த வழக்கில் ஓபன் AI ஆராய்ச்சிகளைத் தொடர நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இது எலான் மஸ்க்கிற்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது .

ஏட்டிக்குப் போட்டியாக OPEN AIக்கு பதிலாக எலான் மஸ்க் ‘ எக்ஸ் AI ‘ யை உருவாக்கத் தொடங்கினார். ஆப்பிள் நிறுவனம் AI தொழில்நுட்பத்துக்கு எக்ஸ் AI உடன் இணையும் என்ற நோக்கத்தில் எலான் மஸ்க் நடத்திய பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில் OpenAI-Apple அறிவிப்பு வந்ததும் எலான் மஸ்க் அதனை விமர்சனம் செய்தும், எச்சரித்தும், அவதூறு பரப்பியும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார் என்று உண்மை நிலவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கின் இந்த எக்ஸ் பதிவுகளுக்கெல்லாம், OPEN AI நிறுவனமோ, ஆப்பிள் நிறுவனமோ எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: What is the background of Elon Musk's Tamil movie memes?
ShareTweetSendShare
Previous Post

அம்பானி, மிட்டலுடன் மோதும் எலான் மஸ்க்!

Next Post

வயகராவால் இப்படியும் ஒரு பலன் ஆய்வில் கண்டுபிடிப்பு!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies