கிருஷ்ணகிரி அருகே பெண்ணை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதலன் படுகாயத்துடன் மீட்கப்பட்டார்.
மேட்டுகொல்ல கொட்டாய் கிராமத்தை சேர்ந்த பழனி மனைவி சத்யா மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார். பழனியின் அக்கா மகன் மாரியப்பனுக்கும், சத்யாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.
இதனை அறிந்த பழனி மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில் சத்யாவின் அலறும் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், சத்யா கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் படுகாயத்துடன் இருந்த மாரியப்பனை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.