உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியே, மறுதேர்வுக்கு பதில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நீட் தேர்வு விவகாரத்தில் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு, அவர்களின் பரிந்துரையின் பேரிலேயே கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என்றார்.
தொடர்ந்து பேசிய தர்மேந்திர பிரதான், ஆயிரத்து 563 மாணவர்கள் மறுதேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் அல்லது அவர்கள் எடுத்த முழு மதிப்பெண்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு சீரிய கவனத்துடன் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், நீட் உள்ளிட்ட தேர்வுகளில் குளறுபடி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.