தேனி மாவட்டம் போடி அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண்ணை மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.
சில்லமரத்துபட்டி கிராமத்தில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் முனீஸ்வரி என்ற இளம்பெண் பணியாற்றி வந்தார்.
காப்பகத்தில் உள்ள 10 வயது சிறுவனுக்கு முனீஸ்வரி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்ட சிறுவன், அங்குள்ள பராமரிப்பாளர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காப்பக நிர்வாகிகள் உடனே மகளிர் காவல்துறையில் புகாரளித்தனர். இதன் அடிப்படையில் மூனீஸ்வரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.