ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே முறையான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அரசு பேருந்தை சிறைபிடித்து பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மூதூர் கிராமத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யாததால், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கிராம மக்கள் பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளனர்.
ஆனால், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அரசு பேருந்தை சிறைபிடித்து, பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.