வேலூரில் வெயில் வாட்டிய நிலையில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் 98 புள்ளி 8 டிகிரி ஃபாரன் ஹீட் அளவிற்கு வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
1 மணி நேரம் இடைவிடாது பெய்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.