டெல்லியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையைக் கண்டித்து பாஜக கட்சியினர் தலையில் காலி மண்பானையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் அண்மைக் காலமாக குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால், டேங்கர் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் கடும் துயரத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி, டெல்லி அமைச்சர் அதிஷி அலுவலகம் முன் பாஜகவினர் மண்பானையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.