சென்னையிலுள்ள ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
புதிய அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள எல்.முருகன் சேத்துப்பட்டில் உள்ள ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
அப்போது தமிழ்நாடு பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் மது மற்றும் மாநில ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அமைச்சர் எல்.முருகனுக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.
இதையடுத்து பதவி ஏற்றதை கொண்டாடும் விதமாக நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி அமைச்சர் எல்.முருகன் தனது வெற்றியை பகிர்ந்து கொண்டார். பின்னர் சங்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து உறுப்பினர்களோடு ஆலோசனை நடத்தினார்.