பிரதமர் மோடியின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தேவையான சக்தியை வழங்குமாறு ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டதாக மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் மத்திய அமைச்சர் குமாரசாமி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், பிரதமர் மோடி தமக்கு மிகப்பெரிய துறையை ஒதுக்கீடு செய்திருக்கிறார்.
எனவே தனது துறை மூலம் பிரதமரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தேவையான சக்தி, ஆலோசனை ஆகியவற்றை வழங்குமாறு ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டதாக அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.