விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளராக மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 10-ம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்துக் கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளராக மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.