சென்னை கோடம்பாக்கத்தில் ஊடகவியலாளர்களை சிறப்பிக்கும் விதமாக விஸ்வ சம்வாத் கேந்திர தமிழ்நாடு நாரத ஜெயந்தி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில், சிறப்பு விருந்தினராக மூத்த செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி, மகான்லால் சதுர்வேதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.ஜி சுரேஷ், விஸ்வ சம்வாத் கேந்த்ரா தென் பாரத அமைப்பாளர் ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, ஊடகவியலாளர்கள் விஜய் கிருஷ்ணா, கோதை லட்சுமி ஜோதி மற்றும் டி.எஸ் கிருஷ்ணன் ஆகியோருக்கு விஸ்வ சம்வாத் கேந்திர தமிழ்நாட்டின் நாரத விருது வழங்கப்பட்டது. மேலும், மகளிர் நலன் சார்ந்த துறைக்காக விஜய் கிருஷ்ணாவுக்கும், அச்சு ஊடகங்களில் எழுத்து சார்ந்த துறைக்காக கோதை ஜோதி லட்சுமிக்கும், சமூக ஊடகங்கள் துறைக்காக டி.எஸ் கிருஷ்ணன் ஆகியோருக்கும் நாரத விருது வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய மூத்த செய்திவாசிப்பாளர் ஷோபனா, “மக்களவையின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகம், மற்ற தூண்களை விட வலுவாகவும், உண்மையானதகாவும் இருக்க வேண்டும்” என்றார்.
அடுத்து பேசிய மகான்லால் சதுர்வேதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.ஜி. சுரேஷ் பேசுகையில், ” ஊடகங்கங்களில் எதிர்மறையான செய்திகளை மட்டும் போடாமல் நேர்மறையான செய்திகளை போட வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய விஸ்வ சம்வாத் கேந்த்ரா தென் பாரத அமைப்பாளர் ஜெ.ஸ்ரீராம், ஊடங்களின் கடமை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.