கர்நாடக அரசு விற்பனை வரியை உயர்த்தியதால் பெட்ரோல், டீசல் விலை 3 ரூபாய் அதிகரித்துள்ளது.
இதனால் பெங்களூரில் பெட்ரோல் லிட்டருக்கு 102.86 ரூபாயாகவும், டீசல் 88.94 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கர்நாடக நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
திருத்தியமைக்கப்பட்ட விற்பனை வரியின்படி, பெட்ரோல் வரி 25.92 சதவீதத்திலிருந்து 29.84 சதவீதமாகவும், டீசல் மீதான வரி 14.3 சதவீதத்திலிருந்து 18.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இதனால், பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் 3 ரூபாய் 5 பைசாவும் உயர்ந்துள்ளன.