நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே பாக்கு தோட்டத்தில் மர்மமான முறையில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது.
புளியம்பாறையில் தனியாருக்கு சொந்தமான பாக்கு தோட்டத்தில் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூராய்வு மேற்கொண்டு முக்கிய உடல்பாகங்களை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் உயிரிழந்து கிடந்தது 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.