தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்ட இளைஞரின் உடல் மீட்கப்பட்டது.
அய்யாநல்லூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், கடந்த 12-ம் தேதி இரவு திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதாக கூறிவிட்டுச் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், அவரது நண்பர்கள் பிரேம்குமார் மற்றும் ஆகாஷ் ராஜ் ஆகியோரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் மூவரும் சேர்ந்து மன்னியாற்றங்கரையில் அமர்ந்து மது அருந்திய போது, அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ளது. இதனால், கோகுல்ராஜை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று, உடலை எரித்துள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து, கோகுல்ராஜ் உடலை மீட்ட போலீசார், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.