உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு, தலா 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதேபோல காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டோருக்கு மாநில அரசின் மேற்பார்வையில் உள்ளூர் நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.