ஆந்திர மாநிலம், டாக்டர் அம்பேத்கர் கோண சீமா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றிலிருந்து எரிவாயு வெளியேறியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
சிந்தலப்பள்ளியைச் சேர்ந்த விஜயேந்திர வர்மா என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனக்கு சொந்தமான விளைநிலத்தில் சுமார் 500 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு அமைத்திருந்தார்.
இந்நிலையில் திடீரென அந்த கிணற்றிலிருந்து வெளியேறிய எரிவாயு சுமார் 15 மீட்டர் உயரம் வரை பீய்ச்சியடித்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.