தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக் கணக்கை தொடங்கிடும் தேர்தலாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமையட்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவை எதிர்கொள்ள முடியாமல் அதிமுக விக்கிரவாண்டி தேர்தல் களத்திலிருந்து வெளியேறியதன் மூலம், மக்கள் எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்துவிட்டது தெளிவாகியுள்ளதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டுமெனவும், அமமுக தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், அமமுக சார்பில் 20 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் சண்முகவேலு, செந்தமிழன் உள்ளிட்டோர் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.