விருதுநகரில் காதலனை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகரைச் சேர்ந்த காசி விஸ்வநாதனும், அதே பகுதியைச் சேர்ந்த நந்தினியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். அப்போது மர்மமான முறையில் காசிவிஸ்வநாதன் உயிரிழந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் காசி விஸ்வநாதனை, நந்தினி கொலை செய்தது தெரியவந்தது.