சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் நினைவு தினத்தை ஒட்டி தென்காசியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செங்கோட்டையை சேர்ந்த சுதந்திரபோராட்ட தியாகி வீரவாஞ்சிநாதனின் நினைவு தினம் ஆண்டு தோறும் ஜூன் 17ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்தாண்டு நினைவு தினத்தை ஒட்டி வீரவாஞ்சிநாதனின் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவசிலைக்கு அரசு சார்பில், மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து கொல்லம் சாலையில் உள்ள திருஉருவச் சிலைக்கு பா.ஜ.க பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.