திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சிறுகாம்பூரை சேர்ந்தவர்கள் ரவிக்குமார் – சுமதி தம்பதியினர், இதில் சுமதிக்கும், மாரிமுத்து என்ற வேறொரு நபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாரிமுத்துவின் தொடர்பை சுமதி புறக்கணித்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, சுமதி வழக்கம் போல் வேலைக்கு செல்லும் போது கத்தியால் குத்தியுள்ளார்.
இதைக்கண்ட அக்கப்பக்கத்தினர், மாரிமுத்துவை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே காயமடைந்த சுமதி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.