பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சீர்திருத்தக் கட்சி 3-ஆவது இடத்துக்குத் தள்ளும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
பிரிட்டன் பொதுத் தேர்தல் ஜூலை 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், நிகல் ஃபாரேஜ் தலைமையிலான சீர்திருத்தக் கட்சி 19 சதவீத வாக்குகள் பெறும் என்றும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வெறும்18 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 37 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சியமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.