தமிழத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு, முழுமையாக முடக்கப்பட்டிருக்கின்றன! - அண்ணாமலை
Aug 2, 2025, 11:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு, முழுமையாக முடக்கப்பட்டிருக்கின்றன! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Jun 17, 2024, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு அதிகாரிகளுக்கே உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படுகுழியில் விழுந்து கிடக்கிறது  எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில், மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற கோட்டாட்சியர் திருமதி தெய்வநாயகி மற்றும் அவரது உதவியாளர்கள் பயணம் செய்த வாகனம் மீது, லாரி ஏற்றிக் கொல்ல முயன்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் முழுவதும் சமூக விரோதிகளின் அராஜகம் அதிகமாகியிருக்கிறது. மணல் கடத்தலை எதிர்த்த கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்ஸிஸ் அவர்கள், தனது அலுவலகத்திலேயே வைத்து மணல் கடத்தல்காரர்களால் கொலை செய்யப்பட்டார். இது போன்ற குற்றச் சம்பவம் நிகழ்ந்த பின்னர் கூட, திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியதால், தொடர்ந்து சேலம், வேலூர் என மணல் கடத்தல்காரர்கள் அரசு அதிகாரிகளைத் தாக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரசு அதிகாரிகளுக்கே உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படுகுழியில் விழுந்து கிடக்கிறது.

தமிழகம் முழுவதும் ஆயுத கலாச்சாரம் நிலவுகிறது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு, அதன் செயல்பாடுகள் முழுமையாக முடக்கப்பட்டிருக்கின்றன.

மணல் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஊடகங்களை மிரட்டி, செய்திகளைப் பொதுமக்களிடம் இருந்து மறைக்கும் முயற்சியில்தான் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால் இவை பற்றி எதுவுமே அறியாமல், கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அரசின் தலையாய கடமையான சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதில், திமுக அரசு முழுமையாகத் தோல்வியுற்றிருக்கிறது.

திமுக அரசு இனியும் விழித்துக் கொள்ளாவிடில், பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, பொறுப்பான எதிர்கட்சியாக தமிழக பாஜக மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: The hands of the police in Tamil are tied and completely disabled! - Annamalai
ShareTweetSendShare
Previous Post

மேற்கு வங்கத்தில் பயங்கர ரயில் விபத்து!-15 பேர் பலி! 60 பேர் காயம்!

Next Post

டிஜி யாத்ரா சேவை என்றால் என்ன?

Related News

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – கல்லூரி மாணவர்கள் இருவர் பலி!

சேலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டம்!

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் பலி!

மணப்பாறை அருகே வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்க கோரி சாலை மறியல்!

திறமையான மாணவர்களுக்கு செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மையத்தில் பயிற்சி – சென்னை IIT இயக்குனர் காமகோடி தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

வாரணாசியில் ரூ.2, 200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

குன்னூர் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து!

கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம்!

ஆண்டிபட்டி அருகே 100 நாள் வேலை பணியாளர்கள் சாலை மறியல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் – தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தொடக்கம்!

திருப்பூர் அருகே உயிரிழந்த விசாரணை கைதி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

நிலம் கிடைக்காததால் தமிழகத்தில் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் – அஸ்வினி வைஷ்ணவ்

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 3 விருதுகளை அள்ளிய பார்க்கிங் திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies