கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில், குடிநீர் குழாயிலிருந்து எலும்புகளும், இறைச்சி கழிவுகளும் வெளியேறியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டில், சாமப்பா லேஅவுட் பகுதியில், கடந்த ஒரு வாரமாக குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகாரளித்தனர்.
இதனையடுத்து அப்பகுதியிலுள்ள குடிநீர் குழாய்களை துண்டித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீரில், இறைச்சி கழிவுகளும், எலும்புகளும் இருந்தன.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியையும், குழாய்களையும் சுத்தம் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.