ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
தமிழ்நாட்டில் முதன்முறையாக, ராமநாதபுரத்திலிருந்து பெரியபட்டினத்திற்கு இயக்கப்படும் நகர பேருந்து மற்றும் ராமநாதபுரத்திலிருந்து சாயல்குடிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தும் முழுக்க, முழுக்க சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படுகிறது.
இதன் சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில், இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதனால் எரிபொருள் செலவு குறைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுதல் தவிர்க்கப்படும் என்பதால், பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.