வரும் 30ஆம் தேதி முதல் மனதின் குரல் நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி முதல் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலியில் மனதின் குரல் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி, தமது எண்ணங்களை நாட்டு மக்களோடு பகிர்ந்துகொள்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மனதின் குரல் நிகழ்ச்சி தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 30ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக பிரதமர் மோடி அறிவிதுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,
தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 30ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்கள் யோசனைகளை. 1800 11 7800 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புமாறும் அல்லது NaMo App இல் பதிவு செய்யுமாறும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.