மும்பை சம்பாஜி நகரில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்தபோது கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் இளம்பெண் உயிரிழந்தார்.
சம்பாஜி நகரை சேர்ந்த இளம் பெண் ஸ்வேதா தீபக், தமது ஆண் நண்பரான சிவராஜ் முலேயுடன் தத் தாம் கோயில் மலைப்பகுதிக்கு சென்றார். அங்கு ரீல்ஸ் வீடியோ பதிவிட நினைத்து அவர், காரை பின்னோக்கி இயக்கியுள்ளார்.
அப்போது கார் ஓட்ட தெரியாத ஸ்வேதா, பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை கொடுத்துள்ளார். இதனால் வேகமாக பின்னோக்கி சென்ற கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இதில் படுகாயமடைந்த ஸ்வேதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.