கும்பகோணத்தில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை வனத்துறையினர் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேல காவேரி சர்வமானிய தெருவில் கடந்த சில நாட்களாக கூட்டம் கூட்டமாக குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
உணவுகளை தேடி குரங்குகள் வீடுகளில் புகுந்து சமைத்த உணவுகள் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச் செல்வதுடன், பொருட்களையும் சேதப்படுத்துகின்றன.
எனவே வனத்துறையினர் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.