துருக்கியில் இருந்து இத்தாலி நோக்கி சென்ற படகு கவிழ்ந்து 78 அகதிகள் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில் இருந்து ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 90 அகதிகள் இத்தாலி நோக்கி படகில் சென்றுக்கொண்டிருந்தனர்.
கலப்ரியா கடற்கரை அருகே படகு சென்றுக்கொண்டிருக்கும் போது திடீரென தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கடலில் மூழ்கினர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு கப்பல் ஒன்று தண்ணீரில் தத்தளித்த 12 பேரை மீட்டது. மேலும் கடலில் 12 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
நிலையில் மாயமான 66 பேர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.