ஈரோட்டில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கோடம்பாளையத்தை சேர்ந்த ரத்தினசாமி, சண்முக ராமசாமி என்பவரிடம் 3 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்கு ஈடாக 10 கோடி மதிப்பிலான தனது நிலத்தை அடமானமாக கொடுத்துள்ளார்.
ரத்தினசாமி கடனை சரிவர செலுத்தாததால் அவருக்கு சொந்தமான நிலத்தை சண்முக ராமசாமி, சிவ சம்பு மற்றும் சங்க நாராயணன் ஆகியோர் தங்களது பெயருக்கு மாற்றி எழுதிஅபகரிக்க முயன்றுள்ளனர்.
இதுகுறித்து ரத்தினசாமி கொடுத்த புகாரின் பேரில் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
			 
                    















