ஜம்மு காஷ்மீரில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜம்மு காஷ்மீரில் சாலை உள்கட்டமைப்பு, தண்ணீர் விநியோகம், உயர்கல்வி உள்ளிட்ட ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழிற்சாலை வளாகங்கள் மற்றும் 6 அரசு கல்லூரிகளின் மேம்பாட்டு பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஸ்ரீநகரில் நடைபெறும் இளைஞர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, அரசு பணிகளுக்கு தேர்வாகியுள்ள 2 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
















