ஈரோடு மாநகராட்சியில் ஆழ்துளை கிணற்றில் சாயக்கழிவு நீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒண்டிக்காரன் பாளையத்தில் வசிக்கும் பத்மநாபன் என்பவரின் வீட்டில் உள்ள ஆழ்துளை கிணற்றை, கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த கிணற்றில் சாய தொழிற்சாலைகள் வெளியேற்றிய கழிவு நீர் கலந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆழ்துளை கிணற்று நீர் துர்நாற்றத்துடன் பச்சை நிறத்தில் காட்சியளிப்பதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சாய தொழிற்சாலைகள் முறையாக கழிவு நீரை சுத்திகரிப்பு செய்கின்றனவா என்பதை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.