மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நல முன்னேற்ற சங்கத் தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதில் கலந்துகொண்ட விவசாய சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.