கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் எதிரொலியாக திருச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது, மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்களை கண்டறிந்து போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மதுவிலக்கு போலீசார், கள்ளச்சாராயம் காய்ச்சிய முத்துசாமி என்ற நபரை கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்த 270 லிட்டர் ஊறல் மற்றும் 6 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.