மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு, சரக்கு ரயில் ஓட்டுநர் விதிகளை முறையாக பின்பற்றாததே காரணமென, ரயில்வே கூட்டு விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே, கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது, சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து, 6 ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்ட கூட்டு விசாரணையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொறியியல், சிக்னலிங், மெக்கானிக்கல் என ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆய்வில் இடம்பெற்றனர். விபத்து நடைபெற்ற உடனேயே, சம்பவ இடத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
சரக்கு ரயில் ஓட்டுநர் சிக்னலில் நிற்காமலும், அதிவேகமாகவும் வந்ததே விபத்திற்குக் காரணமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே ஒரு அதிகாரி மட்டும் மாற்றுக்கருத்து தெரிவித்துள்ளார்.