டி-20 உலகக்கோப்பைக்கான சூப்பர்-8 சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பைக்கான லீக் ஆட்டம் பல்வேறு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது. இந்த அணிகளுக்கிடையேயான சூப்பர்-8 போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரிட்ஜ்டவுன் பகுதியில் நடைபெற்ற சூப்பர்-8 சுற்றில் இந்தியா – அப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு181 ரன்களை குவித்தது.
இதையடுத்து 182 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து ஆல்- அவுட் ஆனது. இதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து நாளை நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இந்திய அணியும் வங்கதேசம் அணியும் மோத உள்ளது.