கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென கன மழை கொட்டித் தீர்த்தது.
இதன் காரணமாக மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.