உலக யோகா தினத்தை ஒட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் யோகா நிகழ்சி சிறப்பாக நடைபெற்றது.
சர்வதேச யோகா தினத்தை அனைவரும் கடைபிடித்து வரும் நிலையில், கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக ஆளுநர் R.N. ரவி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பல்கலைகழக மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று யோகா செய்தனர்.
இதே போல ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி முன்பு நடைப்பெற்ற நிகழ்ச்சியில்
நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களுக்கு யோகநாடி சுத்தி, சாம்பவி முத்ரா போன்ற பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
சர்வதேசயோகாதினம் கொண்டாட்டத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில்,
யோகாவின் மிகப்பெரிய ஆதரவாளர்களான திருமூலர், பதஞ்சலி ஆகியோர் தமிழ்நாட்டின் புனித பூமியிலிருந்து வந்தவர்கள் என்பதையும், இன்று பிரதமர்மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், பாரதத்தின் இந்த பெருமைமிக்க பாரம்பரியம் எவ்வாறு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
யோகா பாரம்பரியம் தேசிய, கருத்தியல் மற்றும் மத எல்லைகளைத் தாண்டியது என்றும் நினைவுகூர்ந்தார். மேலும் மக்களில், குறிப்பாக இளைஞர்கள், யோகாவை ஒரு வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்ளவும், யோகாவின் தொழில்முனைவு பரிமாணங்களை ஆராயவும், ஆரோக்கியமான மற்றும் ஃபிட்இந்தியாவை உருவாக்கவும் ஆளுநர் வலியுறுத்தினார்.