குடிப் பழக்கத்திலிருந்து விடுபட யோகா உதவுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணத்தை குறிப்பிட்டு, குடி போதையில் இருந்து விடுபட யோகா பயிற்சி உதவிவும் என்று கூறியுள்ளார். மேலும், தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பாடத்திட்டத்தில் யோகா பயிற்சி வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
டாஸ்மாக்கை பொறுத்தவரை முதலில் ஆயிரம் கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்றும், படிப்படியாக மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.