முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கான முதலமைச்சரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா? - அண்ணாமலை கேள்வி
Mar 16, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கான முதலமைச்சரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா? – அண்ணாமலை கேள்வி

Murugesan M by Murugesan M
Jun 21, 2024, 07:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர்  மோகன்ராஜை மிரட்டிய திமுக முக்கியப் புள்ளிகள் யார் என்பதை விசாரித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் மோகன்ராஜ். அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றதிலிருந்தே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருந்தார்.

அவரது பதவிக் காலத்தில், பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். ஒரே நாளில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணி செய்து வந்த 25 காவலர்களை இடமாற்றம் செய்தார்.

கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் இத்தனை தீவிரமாக இருந்த மோகன்ராஜ், பணி ஓய்வுக்கு எட்டு மாதங்கள் இருக்கும்போதே, விருப்ப ஓய்வு கேட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் அவர் விருப்ப ஓய்வில் செல்கிறார் என்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. ஆனால், அதற்கு காவல்துறை சார்பில் மழுப்பலான ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. மோகன்ராஜ் அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் விருப்ப ஓய்வு பெற்றார் என்பதை தற்போதைய கள்ளச்சாராய மரணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

தனியார் நாளிதழில்,  மோகன்ராஜ் அவர்கள், ஓய்வு பெற எட்டு மாதங்கள் இருக்கும்போதே விருப்ப ஓய்வில் சென்றதற்குக் காரணம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்தும், அவரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அந்தப் பகுதி திமுக முக்கியப் புள்ளிகள் மிரட்டியுள்ளதாகவும், காவல்துறை தலைமையும் இதனைக் கண்டுகொள்ளவில்லை என்பதால், வேறு வழியின்றி விருப்ப ஓய்வில் சென்றார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையிலேயே முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, பொதுமக்கள் மீது அக்கறை இருக்குமேயானால், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை எண்ணி உண்மையான வருத்தம் இருக்குமேயானால், கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர்  மோகன்ராஜ் அவர்களை மிரட்டிய திமுக முக்கியப் புள்ளிகள் யார் என்பதையும், இதனை அறிந்தும் நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறை அதிகாரிகள் யார் என்பதையும் விசாரித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையேல், எல்லாம் தெரிந்திருந்தும், தன் கட்சியினரைக் காப்பாற்ற பொதுமக்களைப் பலி கொடுத்த முதலமைச்சர் என்பதாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்.

அதற்கு முதற்படியாக, நாங்கள் ஏற்கனவே கூறியது போல, சுமார் ஐம்பது உயிர்கள் பறிபோனதற்குப் பொறுப்பேற்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கான முதலமைச்சரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: Is Chief Minister Stalin a Chief Minister for the people or only for the DMK? - Annamalai questionஅண்ணாமலை கேள்வி
ShareTweetSendShare
Previous Post

எல்லையில் சுவர் எழுப்பும் வட கொரியா!

Next Post

காஷ்மீரில் யோகா செய்வது தமக்கு கிடைத்த பாக்கியம் : பிரதமர் மோடி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies