மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில், பாதுகாப்பு அமைச்சராக ராஜ்நாத் சிங் பதவியேற்ற நிலையில், டெல்லியில் இணை அமைச்சர் எல்.முருகன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து எல். முருகன் தனது எக்ஸ் பதிவில்,
மீண்டும் ஒருமுறை இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள். துறைக்கான அவரது அர்ப்பணிப்பும் பங்களிப்பும் அதை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.