வீட்டு பணியாளர்களை சித்திரவதை செய்ததாக ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு சுவிட்சர்லாந்து நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி உள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஹிந்துஜா குடும்பத்தினருக்கான பங்களாவில் வேலை பார்த்து வந்த இந்திய பணியாளர்களை அவர்கள் சித்திரவதை செய்ததாக தெரிகிறது.
இந்தக் குற்றச்சாட்டில் பிரகாஷ் ஹிந்துஜா, அவரது மனைவி கமல் ஹிந்துஜாவுக்கு தலா நான்கரை ஆண்டு சிறை தண்டனையும், மகன் அஜய் மற்றும் மருமகள் நர்மதா ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி ஜெனிவா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.