கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பை கண்டித்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்துக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை முன்பாக, மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 200க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, விருதுநகர் மாவட்டம் அம்மன் கோவில் திடல் முன்பு பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முயன்றனர். அப்போது அவர்களை தடுத்த போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.