ஆச்சார்ய லக்ஷ்மிகாந்த் தீக்ஷித் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
காசி விஸ்வநாதர் தாம் அர்ப்பணிப்பு மற்றும் ராமர் கோயில் பிரதிஷ்டையில் ஒரு பகுதியாக இருந்த ஆச்சார்ய லக்ஷ்மிகாந்த் தீக்ஷித் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“நாட்டின் சிறந்த அறிஞரும், சங்வேத பள்ளியின் யஜுர்வேத ஆசிரியருமான லக்ஷ்மிகாந்த் தீட்சித் மறைந்தார் என்ற சோகமான செய்தியை அறிந்தேன்.
காசியின் அறிஞர் பாரம்பரியத்தின் புகழ்பெற்ற மனிதர் தீட்சித். காசி விஸ்வநாதர் தாம் மற்றும் ராமர் கோயில் திறப்பு விழாவில் நான் அவர் முன்னிலையில் இருந்தேன். அவரது மறைவு சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்” எனத் தெரிவித்துள்ளார்.