துறைமுக தர வரிசை பட்டியல் டாப் 20ல் இந்திய துறைமுகங்கள்!
Oct 2, 2026, 08:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துறைமுக தர வரிசை பட்டியல் டாப் 20ல் இந்திய துறைமுகங்கள்!

Murugesan M by Murugesan M
Jun 22, 2024, 09:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலக அளவில் துறைமுக தர வரிசை பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் இந்திய துறைமுகங்கள் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளன. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

உலகவங்கியுடன் சேர்ந்து S&P Global Market Intelligence என்னும் நிறுவனம் ஆண்டுதோறும் Container Port Performance Index என்ற பெயரில் உலகிலுள்ள ஒவ்வொரு துறைமுகத்துக்கும் ‘கொள்கலன் துறைமுக செயல்திறன் குறியீட்டை தருகிறது.

துறைமுகங்களின் செயல்பாட்டுத் திறனில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைக் கணக்கில் கொண்டு இந்த தர வரிசை தயாரிக்கப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு துறைமுகங்களிலும் கப்பல்கள் இருக்கும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த துறைமுகங்களின் செயல்திறன் கணக்கிடப்படுகிறது. பிறகு உலக அளவில் துறைமுக தரவரிசை வெளியிடப்படுகிறது.

2023ம் ஆண்டுக்கான கொள்கலன் துறைமுக செயல்திறன் குறியீட்டில் முதல் 100 உலகளாவிய துறைமுகங்களில் ஒன்பது இந்திய துறைமுகங்கள் இடம் பெற்றுள்ளன. உலகளாவிய தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் 9 இந்திய துறைமுகங்கள் இடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

2022 ஆம் ஆண்டு தரவரிசையில் 115-வது இடத்தில் இருந்த மத்திய அரசுக்கு சொந்தமான விசாகப்பட்டினம் துறைமுகம், இப்போது 19-வது இடத்துக்கு உயர்ந்து, முதல் 20 இடங்களுக்குள் வந்துள்ளது.

2022ஆம் ஆண்டில் 48 வது இடத்தில் இருந்த அதானியின் முந்த்ரா துறைமுகமும் வளர்ச்சியடைந்து உலக துறைமுக தரவரிசையில் 27வது இடத்தைப் பிடித்துள்ளது.

உலக துறைமுகங்களின் தரவரிசையில், முதல் 100 இடங்களுக்குள், 41 வது இடத்தில் குஜராத்தில் உள்ள பிபாவாவ் துறைமுகமும், 47 வது இடத்தில் தமிழகத்தில் எண்ணுாரில் உள்ள காமராஜர் துறை முகமும், 63 வது இடத்தில் கேரளாவில் உள்ள கொச்சின் துறைமுகமும், 68 வது இடத்தில் குஜராத்தில் உள்ள சூரத் ஹசிரா துறைமுகமும், 71 வது இடத்தில் ஆந்திராவில் உள்ள நெல்லூர் கிருஷ்ணப்பட்டினம் துறைமுகமும், 80 வது இடத்தில் தமிழகத்தில் உள்ள சென்னை துறைமுகமும் மற்றும் 96 வது இடத்தில் மகாராஷ்ராவில் உள்ள மும்பை ஜேஎன்பிஏ துறைமுகமும் இடம் பிடித்துள்ளன.

சீனாவின் யாங்ஷான் துறைமுகமும், ஓமனின் சலாலா துறைமுகமும் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் முறையான கொள்கைகள் மற்றும் திட்டச் செயல் பாடுகளே இந்த சாதனைக்கு காரணம் என்று பொருளாதார வல்லுனர்கள் பாராட்டுகின்றனர்.

Tags: Top 20 Indian Ports in Port Ranking List!
Share
Tweet
SendShare
Previous Post

3-ஆவது டெர்மினலில் சேவையை தொடங்கிவைத்தார் அமித்ஷா!

Next Post

தலாய் லாமாவிற்கு அமெரிக்கா ஆதரவுக்கரம் பின்னணி என்ன?

Related News

தீவிர மத பற்றாளர், பெண்களுடன் கைகுலுக்க மறுப்பவர் : இந்திய விமானியை குத்திய ஒமானிய துணை விமானி பற்றி பகீர் தகவல்கள் – சிறப்பு தொகுப்பு!

உலகத்திற்கு அமைதி பாதையை பாரதம் காட்டியுள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

மகாத்மா காந்தி பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர்

பள்ளியில் வருமான வரி குறித்து பாடம்; அறிமுகம் செய்தது என்.சி.இ.ஆர்.டி

பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திணறும் மீனாட்சியம்மன் கோவில்

174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித்; ஃப்ளைதுபை விமானத்தில் நடந்தது என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

அஹிம்சை என்றால் என்ன என்பதை உலகத்திற்கு காட்டியுள்ளீர்கள் – விமானி ஸ்மித் மச்சாருடன் video call மூலம் பேசிய பிரதமர் மோடி புகழாரம்!

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies