கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த வழக்கில் முக்கிய நபரை , காவல்துறையினர் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர்.
இவ்வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் சென்னை மதுரவாயலை சேர்ந்த சிவகுமார் என்பவர், எம்ஜிஆர் நகரிலுள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், நள்ளிரவு அங்கு விரைந்து சென்ற சென்னை காவல்துறையினர், சிவகுமாரை கைது செய்து சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.