நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கடல் சீற்றம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் சீற்றம் குறைந்ததால் மீண்டும் கடலுக்கு சென்றனர். இந்நிலையில், கடலில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தனர்.
மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கைக கடற்படையினர், கைதான 18 மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே, தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.