பீகாரில் பாலத்தில் திடீரென நின்ற ரயிலின் அடியில் ஊர்ந்து சென்று அதன் ஓட்டுநர் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்தார்.
பீகாரில் பாலத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில், திடீரென பிரஷர் கசிவு காரணமாக நின்றது. இதனால், ரயில் ஓட்டுநர் உயிரை பணயம் வைத்து ரயிலுக்கும், இருப்புப் பாதைக்கும் இடையில் ஊர்ந்து சென்று பிரச்சினையை சரிசெய்தார்.
அதன்பின்னர், அந்த ரயில் புறப்பட்டு சென்றது. ஓட்டுநர் ரயிலின் அடியில் ஊர்ந்து சென்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.