மயிலாடுதுறை, திருவாரூர் பாஜக மாவட்ட தலைவர்கள் பொறுப்பில் இருந்த விடுவிக்கப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் திருவாரூர் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர், திருவாரூர் மாவட்ட பொதுச்செயலாளர் செந்திலரசன் ஆகியோரும் கட்சி பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுவதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.