சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினத்ததை முன்னிட்டு பிரதமர் மோடி அவரது சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சியாமா பிரசாத் முகர்ஜி நாட்டின் சிறந்த மகன், சிறந்த சிந்தனையாளர் மற்றும் கல்வியாளர் என்று பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், சியாமா பிரசாத் முகர்ஜி, பாஜகவின் கருத்தியல் தாய் அமைப்பான பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சிறந்த மகனும், சிறந்த சிந்தனையாளரும், கல்வியாளருமான டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலி என்றும், அவரின் ஆளுமை திறன் நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஊக்கமளிக்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.